போலீசார் கொடி அணிவகுப்பு
பசும்பலூரில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பசும்பலூரில் தேர்தல் அச்சத்தை போக்கும் வகையிலும், வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையிலும் போலீஸ் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷாபார்த்திபன் உத்தரவின்பேரில் நடைபெற்றது. போலீஸ் அணிவகுப்பிற்கு மங்களமேடு துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ் தலைமை தாங்கினார். இதில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், ஆயுதப்படை வீரர்கள் மற்றும் ஊர்க்காவல் படை வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த அணிவகுப்பு பஸ் நிலையத்தில் தொடங்கி ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் முடிவடைந்தது.
Related Tags :
Next Story