மதனகோபாலசுவாமி கோவிலில் பெருமாள்- தாயார் திருக்கல்யாண உற்சவம்


மதனகோபாலசுவாமி கோவிலில் பெருமாள்- தாயார் திருக்கல்யாண உற்சவம்
x
தினத்தந்தி 26 March 2021 9:35 PM GMT (Updated: 26 March 2021 9:35 PM GMT)

பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலில் பெருமாள்- தாயார் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. நாளை தேரோட்டம் நடக்கிறது.

பெரம்பலூர்:

திருக்கல்யாண உற்சவம்
பெரம்பலூரில் மதனகோபாலசுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. தினமும் இரவில் வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான உதயகருட சேவையும், வெள்ளிக்கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடும் கடந்த 24-ந்தேதி நடந்தது.
இதைத்தொடர்ந்து நேற்று மாலை திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடந்தது. கோவில் பட்டர் பட்டாபிராமன் மற்றும் திருவிக்ரமன்பட்டாச்சாரியார் திருக்கல்யாண உற்சவத்தை நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் முக கவசம் அணிந்து கலந்து கொண்டு பெருமாள்- தாயாரை தரிசனம் செய்து வழிபட்டனர்.
இன்று வெண்ணெய்த்தாழி உற்சவம்
இதனைத்தொடர்ந்து இரவில் புஷ்ப பல்லக்கில் சுவாமி வீதி உலா நடந்தது. இன்று (சனிக்கிழமை) வெண்ணெய்த்தாழி உற்சவமும், இரவில் குதிரை வாகனத்தில் வீதி உலாவும் நடக்கிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள், பக்தர்கள், கட்டளைதாரர்கள் செய்து வருகின்றனர்.

Next Story