ஸ்ரீரங்கம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் தீவிர வாக்கு சேகரிப்பு


அ.தி.மு.க. வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் பொதுமக்களிடம் வாக்குசேகரித்த போது
x
அ.தி.மு.க. வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் பொதுமக்களிடம் வாக்குசேகரித்த போது
தினத்தந்தி 27 March 2021 9:45 AM IST (Updated: 27 March 2021 9:46 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் ஸ்ரீரங்கம் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக செயல்வீரர்கள் கூட்டம், அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி பிரமுகர்கள் சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு பிரசார திட்டங்கள் மூலமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட ஸ்ரீரங்கம் பகுதி, அந்தநல்லூர் ஒன்றியம், மணிகண்டம் ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்தநிலையில் நேற்று ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட தாதாநாயக்கன்பட்டி பகுதியில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது, தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் கூறுகையில், அ.தி.மு.க. கட்சியினருக்கு மட்டும் தான் தனிமனித ஒழுக்கம் உள்ளது. தி.மு.க. கட்சியை சேர்ந்தவர்கள் அனைவரும் குடும்ப வாரிசுகளையே தேர்தலில் நிறுத்துகிறார்கள். சட்டமன்ற உறுப்பினர் என்பவர் தொகுதி மக்களுக்கு அடிப்படை தேவைகளை செய்து தர வேண்டும். இல்லை என்றால் அவர்கள் இருப்பதை விட இறப்பதே மேல் என தேர்தல் பிரசாரத்தின்போது கூறினார். பிரசாரத்தின் போது அப்பகுதி மக்கள் ஏராளமானோர் முக கவசம் இல்லாமல் கூடியிருந்தனர். கொரோனா நோய் தொற்றின் பாதிப்பு குறித்தும் கூறி அனைவருக்கும் முககவசம் வழங்கினார். 
சித்தாநத்தம் பகுதி மக்களுக்கு புதிய வீடு கட்டி தரப்படும் என பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

நிகழ்ச்சியில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் செல்வராஜ் த.மா.கா. மாநில செயற்குழு உறுப்பினர் விஜய், பொதுச்செயலாளர் கணேசன், பாரதிய ஜனதா கட்சியினர், ராஜேந்திரன், கோபால், ஜெயசீலன், மல்லிகாஅகஸ்டின் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story