முசிறி தொகுதியை அ.தி.மு.க.வின் கோட்டை என்று மீண்டும் நிரூபித்து காட்டுவோம்; வேட்பாளர் செல்வராசு எம்.எல்.ஏ. பேச்சு
முசிறி சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் ஜெயலலிதா பேரவை மாநில இணைச்செயலாளர் எம்.செல்வராசு எம்.எல்.ஏ. முசிறி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
நேற்று காட்டுப்புத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் தனது ஆதரவாளர்களுடன் சென்று பிரசாரம் செய்து வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், முசிறி சட்டமன்ற தொகுதி மீண்டும் அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபித்து காட்டுவோம். காவிரி ஆற்றில் நிரந்தர கொரம்பு அமைக்கப்படும். விவசாயிகளுக்கு என்றும் உற்ற தோழனாக இருப்பேன். உங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் மேற்கொள்ள பாடுபடுவேன் என்று கூறினார்.
பிரசாரத்தின்போது முன்னாள் எம்.எல்.ஏ. ரத்தினவேல், மாவட்ட கவுன்சிலர் ரவிசந்திரன், ஒன்றிய செயலாளர்கள் பால்மணி, பிரகாஷ்வேல், முன்னாள் ஒன்றிய செயலாளர் கே.வி.பழனிவேல், நகர செயலாளர் ராமசந்திரன், நிர்வாகிகள் பாரதிராஜா, வீரக்குமார், ஜெயசீலன், ராமமூர்த்தி மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story