அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை தருவேன் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பையா கவுண்டர் வாக்குறுதி
வெள்ளக்கிணறு, துடியலூர் பகுதியில் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை தருவேன் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பையா கவுண்டர் வாக்குறுதி அளித்தார்.
சரவணம்பட்டி,
தமிழக சட்டமன்ற தேர்தலில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற
தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தி.மு.க வேட்பாளர் பையா கவுண்டர் (எ) ஆர்.கிருஷ்ணன் போட்டியிடுகிறார். அவர் நேற்று துடியலூர் பகுதி 1, 2, 4, 26, 43 ஆகிய வார்டுகளுக்குட்பட்ட, வெள்ளக்கிணறு, உருமாண்டம்பாளையம், சமத்துவபுரம், அப்பநாயக்கன்பாளையம், கலைஞர் நகர், குமாரசாமி அவென்யூ, மீனாட்சி கார்டன், உழைப்பாளர் வீதி, டாக்டர் அம்பேத்கர் வீதி, கலைமகள் கார்டன், முத்து நகர், அரிஜன காலனி, சக்தி அவென்யூ, சேரன் காலனி உட்பட பல்வேறு பகுதிகளில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது,
துடியலூர், வெள்ளக்கிணறு பகுதியில் குடிநீர், தார்சாலை, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளிப்பேன், திமுக ஆட்சி அமைந்த உடன் உங்களது குறைகள் அனைத்திற்கும் போர்கால அடிப்படையில் 100 நாட்களில் உடனடியாக தீர்வு காண்பேன். என வாக்குறுதி அளித்தார். முன்னதாக அவருக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் ம.தி.மு.க மாவட்ட செயலாளர் மோகன்குமார், கூட்டணி கட்சியின் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் டி.பி.சுப்பிரமணியம், சி.வி.தங்கவேலு, ராமமூர்த்தி, கிருஷ்ணன், பிரேம், தம்பி வினோத், மற்றும் தி.மு.க மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் பழனியப்பன், ஜோதிபாசு, பகுதி பொறுப்பாளர் அருள்குமார் மற்றும் அரசூர் பூபதி, சிங்கை ரவிச்சந்திரன், பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ரேவதி, ஆனந்தன், ஈஸ்வரன், அவினாசியப்பன், சாமிநாதன், ராக்கிமுத்து, வட்டச் செயலாளர்கள் சண்முகம், ராஜசேகர், சுந்தரம், பிரபாகரன், இமயவரம்பன் ஐடி விங் சுப்பிரமணியம், ஜெயராம், நிதியரசு,
தமிழ்நிதி, ராஜகோபால், வெற்றி, காங்கிரஸ் கட்சி
சின்னுராமகிருஷ்ணன், மௌனசாமி, நடராஜன், கந்தசாமி,
ராமமூர்த்தி, ம.தி.மு.க சம்பத், விஷ்வராஜ், காளிச்சாமி, சிவசங்கர், உருவை நாகராஜ் மற்றும், சி.பி.எம் ராமகிருஷ்ணன், செந்தில்குமார், விஜயா, பழனிச்சாமி, சி.பி.ஐ சண்முகம், பாண்டியன், கிட்டுசாமி, நல்லசாமி, வி.சி.மணி, ஆறுச்சாமி, கோபால்சாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி காலனி கண்ணையன் உள்ளிட்ட கூட்டணிக்கட்சி நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story