பாபநாசத்தை தஞ்சை மாவட்டத்தின் முதன்மை தொகுதியாக மாற்றுவேன்; மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் உறுதி
பாபநாசத்தை தஞ்சை மாவட்டத்தின் முதன்மை தொகுதியாக மாற்றுவேன் என்று மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் உறுதி அளித்தார்.
வாக்குசேகரிப்பு
பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி மனிதநேயமக்கள் கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லா தீவிர வாக்குசேகரிப்பில்ஈடுபட்டார். பாபநாசம், கோபுராஜபுரம், ராஜகிரி பண்டாரவாடை, கோவில்தேவராயன் பேட்டை, ரெகுநாதபுரம், சரபோஜிராஜபுரம், வழுத்தூர், சக்கராப்பள்ளி, சூலமங்கலம், கள்ளர் பசுபதிகோயில், பசுபதிகோயில், குருக்கணை ஆகிய கிராமங்களில் வாக்காளர்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பாபநாசம் பகுதியில் வேளாண்மை கல்லூரி, அரசு கலைக்கல்லூரி, அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், அரசு போக்குவரத்து பணிமனை, பாபநாசம் அரசு கிளை நூலகத்திற்கு நிரந்தர கட்டிடம் அமைக்க பாடுபடுவேன், பாபநாசம் புதிய அன்னுகுடி வாய்க்கால் தூர்வாரப்படும், இடிக்கப்பட்ட பாபநாசம் நெடுஞ்சாலை துறை அலுவலகம், வட்டார கல்வி அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், புறநோயாளிகள் பிரிவு கட்டிடம், மருத்துவர் குடியிருப்பு ஆகியவற்றை தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் கட்டிக் கொடுக்கப்படும்,
கால்நடை மருத்துவமனை
பாபநாசம் அரசு மருத்துவமனை, கால்நடை மருத்துவமனை நவீன வசதியுடன் புதுப்பிக்கப்படும். தஞ்சை மாவட்டத்தில் பாபநாசம் சட்டமன்ற தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவதற்கு அயராது பாடுபடுவேன்,. பாபநாசம் தொகுதியில் வெற்றி பெற்ற உடன் எம்.எல்.ஏ அலுவலகத்துக்கு தினமும் வரும் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுப்பேன்
இவ்வாறு அவர் பேசினார்.
வேட்பாளருடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணை தலைவர் அப்துல் ரகுமான், ராமநாதபுரம் நவாஸ்கனி எம்.பி, , மாநில செயலாளர்கள் ஆடுதுறை ஷாஜகான், மில்லத் முகமது இஸ்மாயில், மாவட்டசெயலாளர் ராஜாஜி, மனிதநேய மக்கள் கட்சி மாநில பொருளாளர் ஆருண் ரசீத், தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் கல்யாணசுந்தரம் தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் லோகநாதன், பாபநாசம் தி.மு.க தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், பாபநாசம் பேரூர் செயலாளர் கபிலன், காங்கிரஸ் கமிட்டி பிற்படுத்தபட்டோர் நல பிரிவு மாநில செயலாளர் பூபதி
ராஜா மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story