நாசரேத்தில் போலீசார், துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு


நாசரேத்தில் போலீசார், துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
x
தினத்தந்தி 28 March 2021 5:09 PM IST (Updated: 28 March 2021 5:09 PM IST)
t-max-icont-min-icon

நாசரேத்தில் போலீசார், துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு நடந்தது.

நாசரேத்:
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நாசரேத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக வாக்களிக்கலாம் என்பதனை வலியுறுத்தி துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இக்கொடி அணிவகுப்புக்கு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபி தலைமை தாங்கி நடத்திச் சென்றார். சாத்தான்குளம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெகதீஷ் குமார், நாசரேத் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் பொ்ணாட் சேவியர், தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் சாம்சன் ஜெபதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாசரேத் காவல் நிலையத்திலிருந்து தொடங்கிய கொடி அணிவகுப்பு பேரணி நாசரேத் ரயில் நிலையம், காமராஜர் பஸ்நிலையம், சந்தி பஜார் வழியாக சென்று மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியை அடைந்தது. இப்பேரணியில் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் 130க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story