மண்ணச்சநல்லூர் தொகுதி கிராமங்களில் கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும் அ.தி.மு.க. வேட்பாளர் பரஞ்ஜோதி வாக்குறுதி
கீழமங்கலம்,மேலக்கோட்டை, கீழக்கோட்டை, வெங்கடா சலபுரம்,குங்குமபுரம் உள்ளிட்ட கிராமங்களில் கொளுத்தும் வெயிலில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
மண்ணச்சநல்லூர்,
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி நேற்று வெளியனூர், கரட்டாம்பட்டி கீழமங்கலம்,மேலக்கோட்டை, கீழக்கோட்டை, வெங்கடா சலபுரம்,குங்குமபுரம் உள்ளிட்ட கிராமங்களில் கொளுத்தும் வெயிலில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
அப்போது கரட்டாம் பட்டியில் ஏழை, எளிய மாணவ மாணவர்களின் நலன் கருதி அங்கு அரசு கல்லூரி மாணவ மாணவியர் விடுதி அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.மண்ணச்சநல்லூர் தொகுதி மக்கள் தாராளமாக குடிநீர் பெறும் வகையில் கொள்ளிடம் ஆற்றங் கரையில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும், மண்ணச்ச நல்லூர் பகுதியில் 7 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும் அமைக்கப்படும்.மேலும் தேவைப்படும் கிராமங்களில் கிராம மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தார். நேற்று மாலை இனாம் சமயபுரம் ,இருங்களூர் பகுதிகளில் வாக்கு சேகரித்தார். இனாம் சமயபுரத்தில் வேட்பாளர் பரஞ்ஜோதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு ஒவ்வொரு தெருவிற்கும்சென்று வாக்கு சேகரித்தார். வேட்பாளர் பரஞ்சோதியுடன் அமைச்சர் வளர்மதி, முன்னாள் அமைச்சர் டி.பி.பூனாட்சி, ஒன்றிய செயலாளர்கள் ஆதாளி, ஜெயக்குமார், நகர செயலாளர் சம்பத், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள், தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கத்தினர்,பா.ம.க., த.மா.கா உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் சென்றிருந்தனர்.
Related Tags :
Next Story