போடியில் இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்


போடியில் இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 March 2021 10:46 PM IST (Updated: 28 March 2021 10:46 PM IST)
t-max-icont-min-icon

போடியில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணிக்கு எதிராக இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி :

தேனி மாவட்டம் போடியில், நேற்று மாலை தேவர் சிலை அருகில் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் திடீரென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 அப்போது அவர்கள் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணிக்கு எதிராகவும், அவர்களுக்கு வாக்களிக்க கூடாது என்றும் கோஷமிட்டனர். 

ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க.வுக்கு எதிரான வாசகங்கள் எழுதிய தட்டிகளை பிடித்து இருந்தனர். 

பின்னர் அவர்கள் சிறிது நேரத்தில் கலைந்து சென்றனர். 

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story