ஸ்ரீரங்கம் தொகுதி அந்தநல்லூர் ஒன்றியத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் வீதி, வீதியாக சென்று தீவிர ஓட்டு வேட்டை
முதலில் கம்பரசம்பேட்டை பகுதியில் தொடங்கிய தேர்தல் பிரசாரமானது, முத்தரசநல்லூர், அல்லூர், பழூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.
ஜீயபுரம்,
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் தொடர் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், நேற்று காலை அந்தநல்லூர் வடக்கு ஒன்றியத்தில் அவர் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். முதலில் கம்பரசம்பேட்டை பகுதியில் தொடங்கிய தேர்தல் பிரசாரமானது, முத்தரசநல்லூர், அல்லூர், பழூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில், ஜெயலலிதா விட்டுச்சென்ற பணியை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து மக்களுக்காக செய்து வருகிறார். அ.தி.மு.க. அரசு மக்களுக்கு வசந்த காலத்தை கொடுத்துள்ளது. இந்தியாவில் நீர் மேலாண்மையில் முதன்மை பெற்று விளங்கி வருகிறது என்று கூறி அ.தி.மு.க. செய்துள்ள சாதனைகளையும், 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக மாற்றி தருவோம். குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,500 வங்கி கணக்கில் செலுத்துவோம், வருடத்திற்கு ஆறு கியாஸ் சிலிண்டர் இலவசம், திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் மற்றும் ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.60 ஆயிரம் உயர்தியது என்ற அ.தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்து கூறினார்.
அந்தநல்லூர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட, அல்லூர், திருச்செந்துறை ஜீயபுரம் கடைவீதி, பெரியகருப்பூர், சின்னகருப்பூர், மேக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது பிரசாரத்தில் ஒன்றிய கழக செயலாளர் அழகேசன், முத்தரசநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆதிசிவன், கோபால், சுப்பிரமணி, கர்ணன், பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் ஈஸ்வரன், அழகர்சாமி உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story