குருத்தோலை ஏந்தி கிறிஸ்தவர்கள் பவனி


குருத்தோலை ஏந்தி கிறிஸ்தவர்கள் பவனி
x
தினத்தந்தி 29 March 2021 2:28 AM IST (Updated: 29 March 2021 2:28 AM IST)
t-max-icont-min-icon

குருத்தோலை ஏந்தி கிறிஸ்தவர்கள் பவனி வந்தனர்.

பெரம்பலூர்:
குருத்தோலை ஞாயிற்றுக்கிழமையை யொட்டி பெரம்பலூரில் ரோவர் வளைவு அருகே உள்ள டி.இ.எல்.சி. தூய யோவான் திருத்தலத்தில், அந்த திருத்தலத்தை சேர்ந்த கிறிஸ்தவர்களும், புனித பனிமயமாதா திருத்தலம், ஆத்தூர் சாலையில் சி.எஸ்.ஐ. திருத்தலத்தை சேர்ந்த கிறிஸ்தவர்களும் ஒன்றாக கூடினர். பின்னர் அவர்கள் குருத்தோலையை கையில் ஏந்தி பெரம்பலூர் சங்குபேட்டை வரை கிறிஸ்தவ பாடல்களை பாடிக்கொண்டு பவனியாக ஒன்றாக சென்றனர். பின்னர் பிரிந்து அவரவர் திருத்தலத்திற்கு பவனியாக சென்றனர். இதையடுத்து அந்தந்த திருத்தலங்களில் குருத்தோலை சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதேபோல் குன்னம், வேப்பந்தட்டை, பாடாலூர், மங்களமேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேவாலயங்களிலும் குருத்தோலை பவனி நடைபெற்றது. 

Next Story