ஸ்ரீரங்கம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கு ப கிருஷ்ணன் மணப்பாறை பகுதியில் சூறாவளி சுற்றுப்பயணம்


ஸ்ரீரங்கம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கு ப கிருஷ்ணன் மணப்பாறை பகுதியில் சூறாவளி சுற்றுப்பயணம்
x
தினத்தந்தி 29 March 2021 8:38 PM IST (Updated: 29 March 2021 8:38 PM IST)
t-max-icont-min-icon

முன்னாள் அமைச்சர் கு ப கிருஷ்ணன் ஸ்ரீரங்கம் தொகுதி சூறாவளி சுற்றுப் பயணம் செய்து, இரட்டை இலை சின்னத்துக்கு தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்.

ஜீயபுரம், 

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில்  முன்னாள் அமைச்சர் கு ப கிருஷ்ணன் போட்டியிடுகிறார். அவர் தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து, இரட்டை இலை சின்னத்துக்கு தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். அவர், ஶ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட மணப்பாறை பகுதியில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து பேசுகையில் சுட்டெரிக்கும் சூரியனை வீழ்த்திவிட்டு, குளிர் தரும் மரமாக நல்லாட்சி அமைய இரட்டை இலைக்கு வாக்களிப்பீர் என்று வேண்டுகோள் விடுத்தார். சென்ற இடமெல் லாம் பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் மகிழ்ச்சியுடன் வரவேற்ற னர். எங்களின் ஆதரவு எப்போதும் உங்களுக்கு என்று கூறினார்கள். 

உடன்அ.தி.மு.க. நிர் வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story