திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி
திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி
திருவண்ணாமலை
திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 856 ஆண்களும், 1 லட்சத்து 46 ஆயிரத்து 956 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் 39 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 84 ஆயிரத்து 851 வாக்காளர்கள் உள்ளனர். தொகுதியில் 400 வாக்குச் சாவடி மையங்கள் உள்ளன.
வருகிற சட்டமன்ற தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் தி.மு.க., பா.ஜ.க. மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தொகுதிக்கு தேவையான 480 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 480 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 524 வாக்காளர்கள் தாம் அளித்த வாக்கை உறுதி செய்யும் கருவி ஆகியவை ஏற்கனவே எண் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள பழைய ஒன்றிய அலுவலகத்தில் வைக்கப்பட்டு உள்ளது.
நேற்று மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி மற்றும் வாக்காளர்கள் தாம் அளித்த வாக்ைக உறுதி செய்யும் கருவியில் சின்னம் பொருத்தும் பணி அரசியல் கட்சியினர் முன்னிலையில் நடந்தது. திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் வெற்றிவேல் தலைமை தாங்கி பார்வையிட்டார்.
Related Tags :
Next Story