டிரைவர் உள்பட 8 பேர் படுகாயம்
அரசு பஸ் கவிழ்ந்து டிரைவர் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்
மதுரை,
திருமங்கலத்தில் இருந்து ஆரப்பாளையத்திற்கு நேற்று முன்தினம் இரவு அரசு டவுன் பஸ் ஒன்று புறப்பட்டது. அந்த பஸ் பழங்காநத்தம் அருகே வந்தபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. பின்னர் பஸ் அங்கிருந்த சாலையின் தடுப்பு சுவரின் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ் டிரைவர் ஜனகர், கண்டக்டர் சுப்பிரமணி மற்றும் பயணிகள் உள்ளிட்ட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சுப்பிரமணியபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நடுரோட்டில் பஸ் கவிழ்ந்து கிடந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன்பின்னர் போலீசார் அந்த பஸ்சை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story