டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து பணம், மது பாட்டில்கள் திருட்டு


டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து பணம், மது பாட்டில்கள் திருட்டு
x
தினத்தந்தி 29 March 2021 8:54 PM GMT (Updated: 29 March 2021 8:54 PM GMT)

டாஸ்மாக் கடையில் திருட்டு நடந்தது

வேப்பந்தட்டை
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள தொண்டமாந்துறை-அரும்பாவூர் சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் நேற்று முன்தினம் இரவு விற்பனையை முடித்துவிட்டு விற்பனையாளர் மாதேஸ்வரன் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை டாஸ்மாக் கடையை திறக்க வந்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.12 ஆயிரம் மற்றும் மதுபாட்டில்கள் திருட்டு போயிருந்தன. இதுகுறித்து டாஸ்மாக் மேற்பார்வையாளர் மார்க்கண்டேயனுக்கு தகவல் கொடுத்தார். அவர், அரும்பாவூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story