சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி உள்ளது; மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.ராஜகுமார் பேச்சு
சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி உள்ளது என்று மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.ராஜகுமார் கூறினார்.
பாதுகாப்பு அரண்
மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.ராஜகுமார் நேற்று நீடூரில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அகில இந்திய அளவில் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக இருப்பது காங்கிரஸ் கட்சிதான். தமிழகத்தில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி கட்சி சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக உள்ளது. எனவே சிறுபான்மையினரை மதிப்பதோடு, அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு என்றும் ஆதரவாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
வாக்குசேகரிப்பு
தொடர்ந்து வில்லியநல்லூர், வரதம்பட்டு, தலைஞாயிறு, இளந்தோப்பு, கடக்கம், பட்டவர்த்தி ஆகிய ஊராட்சிகளில் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.ராஜகுமார் வாக்கு சேகரித்தார். அப்போது அவருடன் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ., சத்தியசீலன், வடக்கு ஒன்றிய செயலாளர் இளையபெருமாள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story