வியாபாரி உள்பட 3 பேரிடம் ரூ.3¼ லட்சம் பறிமுதல்


வியாபாரி உள்பட 3 பேரிடம் ரூ.3¼ லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 30 March 2021 6:23 PM GMT (Updated: 30 March 2021 6:23 PM GMT)

திருப்பூரில் உரிய ஆவணம் இல்லாததால் பனியன் வியாபாரி உள்பட 3 பேரிடம் இருந்து ரூ.3 லட்சத்து 41 ஆயிரத்து 60ஐ பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருப்பூர்
திருப்பூரில் உரிய ஆவணம் இல்லாததால் பனியன் வியாபாரி உள்பட 3 பேரிடம் இருந்து ரூ.3 லட்சத்து 41 ஆயிரத்து 60ஐ பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வாகன சோதனை
சட்டமன்ற தேர்தலையொட்டி  திருப்பூர் மாவட்டம் முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, வாகன சோதனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கணக்கம்பாளையம் பிரிவு அருகே நேற்று காலை பறக்கும் படை அதிகாரி பழனிச்சாமி தலைமையில், போலீஸ் சஇன்ஸ்பெக்டர் சண்முக சுந்தரம் ஆகியோர் அடங்கிய குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். இந்த நிலையில் அந்த வழியாக திருப்பூர் எஸ்.வி. காலனியை சேர்ந்த சுரேஷ்குமார்என்பவர் காரில் வந்தார். அதிகாரிகள் அந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் காரில் ரூ.1 லட்சத்து 31 ஆயிரத்து 600 இருந்தது. இதற்கான ஆவணத்தை அதிகாரிகள் கேட்டனர். ஆனால் அதற்கான ஆவணம் அவரிடம் இல்லை. இதனால் அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.
ரூ.3 லட்சத்து 41 ஆயிரத்து 600 பறிமுதல்
இதுபோல் அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்ட போது மற்றொரு காரில் எம்.எஸ்.நகரை சேர்ந்த கார்த்திக் என்பவர் வந்தார். அப்போது அவரிடம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் இருந்தது. இதற்கான ஆவணம் இல்லாததால், அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து,  திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகத்தில் உதவி தேர்தல் பார்வையாளர் விஜயலட்சுமி, தலைமையிடத்து துணை தாசில்தார் கவுரி ஆகியோர் முன்னிலையில் ஒப்படைத்தனர்.
மேலும், புஷ்பா சந்திப்பில் பறக்கும் படை அதிகாரி ஸ்ரீராம்குமார் தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த பனியன் வியாபாரி நித்தின் என்பவர் காரில் வந்தார். அவரிடம் ரூ.1 லட்சம் இருந்தது. இதற்கான ஆவணம் இல்லாததால், இந்த பணமும் பறிமுதல் செய்து தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக 3 பேரிடமும் சேர்த்து ரூ.3 லட்சத்து 41 ஆயிரத்து 600 பறிமுதல் செய்யப்பட்டது.
அவினாசி
அவினாசி தொகுதிக்குட்பட்ட அவினாசி ஒன்றியம் பழங்கரை அருகே தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்தவழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் லாரி டிரைவர் ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியைச் சேர்ந்த ராமர்  என்பதும், கேரளாவில் இருந்து முட்டை லோடு ஏற்றிக்கொண்டு ஈரோடு நோக்கி லாரி சென்றது தெரியவந்தது. மேலும் அவரிடம் உரிய ஆவணம் இன்றி இருந்த ரூ. 7 லட்சத்து 27 ஆயிரத்து 810ஐ பறக்கும் படையினர் பறிமுதல் செய்து அவினாசி தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

Next Story