சேலத்துக்கு சரக்கு ரெயிலில் 2,600 டன் பருப்பு வந்தது
சரக்கு ரெயிலில் 2,600 டன் பருப்பு வந்தது
சேலம்:
சேலம் செவ்வாய்பேட்டை மார்க்கெட் ரெயில் நிலையத்துக்கு வட மாநிலங்களில் இருந்து கோதுமை, பருப்பு உள்ளிட்ட தானியங்கள் சரக்கு ரெயில்கள் மூலம் கொண்டு வரப்படுகின்றன. மேலும் சில மாநிலங்களில் இருந்து உரம், சிமெண்டு மூட்டைகளும் இங்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த நிலையில் மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து சரக்கு ரெயில் மூலம் சேலம் செவ்வாய்பேட்டை மார்க்கெட் ரெயில் நிலையத்துக்கு நேற்று 2,600 டன் பருப்பு கொண்டு வரப்பட்டன. கேரளாவில் இருந்து 700 டன் உரமும் சரக்கு ரெயில் மூலம் சேலத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் இந்த பருப்பு மற்றும் உரம் மூட்டைகளை தொழிலாளர்கள் சரக்கு ரெயில்களில் இருந்து இறக்கி லாரிகளுக்கு ஏற்றினர். இதையடுத்து அந்த மூட்டைகள் மாவட்டத்தில் உள்ள குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story