விராலிமலை தொகுதிக்காக உழைத்துக்கொண்டே இருப்பேன் அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு


விராலிமலை தொகுதிக்காக உழைத்துக்கொண்டே இருப்பேன் அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு
x
தினத்தந்தி 31 March 2021 8:33 AM IST (Updated: 31 March 2021 8:33 AM IST)
t-max-icont-min-icon

விராலிமலை தொகுதிக்காக உழைத்துக்கொண்டே இருப்பேன் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

அன்னவாசல், 

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர் அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று இலுப்பூர் முஸ்லிம் தெருவில்  ஸ்கூட்டரில்  வீடு, வீடாக சென்று வாக்குசேகரித்தார். அப்போது அவர் கட்சி கூட்டணியை பார்க்காமல், நான் செய்த சாதனைகள் பார்த்து எனக்கு வாக்களிக்குமாறு கூடியிருந்த மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அதன்பின்பு இலுப்பூர் பேரூராட்சி பகுதியில் உள்ள நவம்பட்டி, மார்க்கெட், ஜீவாநகர், சமாதானபுரம், விளாப்பட்டி, கள்ளர்தெரு தெப்பகுளம், சிவன்கோவில்தெரு, சீதாராமன்தெரு, கம்மாளத்தெரு, பள்ளிவாசல்காடு, மங்களம்மகால், முஸ்லிம்தெரு, கண்ணாரத்தெரு, கோட்டைதெரு, பஜனைமடம், பாப்பான்குடி, ஓலைமான்பட்டி, வியகுலமாதா தெரு, அந்தோணியார் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்து அமைச்சர் விஜயபாஸ்கர் வாக்கு சேகரித்தார். உழைத்துகொண்டே இருப்பேன் அப்போது அவர் பேசியதாவது:-

கடந்த முறை விராலிமலை தொகுதி மக்கள் போட்ட வாக்குகளால் விஜயபாஸ்கர் என்ற ஒத்த உயிர் கொரோனா காலகட்டத்தில் உலகமே அஞ்சி நின்ற போது களத்தில் நின்று பல ஆயிரம் உயிர்களை காப்பாற்ற உதவியது. என் உடலில் கடைசி சொட்டு ரத்தம் உள்ளவரை விராலிமலை தொகுதிக்காக உழைத்துக்கொண்டே இருப்பேன். 

கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அது யாருக்காக கொடுத்தான் என்ற எம்.ஜி.ஆரின் பாடலுக்கு இணங்க விராலிமலை தொகுதிமக்களுக்கு தொடர்ந்து கொடுத்துக்கொண்டே இருப்பேன். கபடி என்றாலும் களத்தில் இருப்பேன். கிரிக்கெட் என்றாலும், ஜல்லிக்கட்டு என்றாலும், கஜா என்றாலும் கொரோனா என்றாலும் இத்தொகுதி மக்களுக்காக முதல் ஆளாக களத்தில் நிற்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story