திருவெறும்பூர் தொகுதியில் அதிகவாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற செய்யுங்கள் தி.மு.க.வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு


திருவெறும்பூர் தொகுதியில் அதிகவாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற செய்யுங்கள்  தி.மு.க.வேட்பாளர் அன்பில் மகேஷ்  பொய்யாமொழி பேச்சு
x
தினத்தந்தி 31 March 2021 9:49 AM IST (Updated: 31 March 2021 9:49 AM IST)
t-max-icont-min-icon

காட்டூர் பகுதி, 62-வது வார்டில் வீதி வீதியாக அன்பில் மகேஷ் பொய்யாமொழி நடந்து சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

திருவெறும்பூர்,

திருவெறும்பூர் தொகுதி, காட்டூர் பகுதி, 62-வது வார்டில்   வீதி வீதியாக அன்பில் மகேஷ் பொய்யாமொழி  நடந்து சென்று  உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது  பொதுமக்களிடத்தில் அவர்  பேசுகையில்,   உதய சூரியன்தான் வென்றது என்கிற செய்தி மே - 2ம் தேதி மாலை நமக்கெல்லாம் கிடைக்க  போகின்றது.

 இந்த  பகுதியில் சமுதாய கூடம் கட்டி தர வேண்டும் என்று  பொதுமக்கள் என்னிடத்தில் வைத்த கோரிக்கையை  மே -2-ம் தேதி  தி.மு.க.  ஆட்சிக்கு வந்ததும் முதல் பணியாக சமுதாய கூடம் கட்டி தருவோம் என்று உறுதியளித்தார்.   கழக தலைவர்  மு.க. ஸ்டாலின் தான் முதலமைச்சராக வர போகின் றார் என அனைத்து கருத்துக் கணிப்புகளும் சொல்
கின்றது.  தமிழகத்தில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் 
தி.மு.க.வைச் சார்ந்த, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிதான் வெல்ல போகின்றது.  அதில் முதல் தொகுதியாக திருவெறும்பூர் தொகுதி  பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக இருக்க வேண்டும் என்றார்.  தி.மு.க. தேர்தல் அறிக்கைதான் கதாநாயகன் என்று சொல்வார்கள், அப்படிதான்  தற்போதுள்ள  தேர்தல் அறிக்கையிலும்  குடும்ப அட்டை உள்ள குடும்ப தலைவிக்கு உரிமை தொகையாக மாதம்  ரூபாய் 1000 வழங்க உள்ளனர்   கொரோனா  காலத்தில்  பாதிக்கப்பட்ட குடும்பங் களின் இழப்பை மனதில் வைத்துக்கொண்டு ஜூன்  3ம் தேதி கருணாநிதியின்  பிறந்த நாளை முன்னிட்டு யார்  யாரெல்லாம்  குடும்ப அட்டை வைத்துள்ளார்களோ அவர்களுக்கு 4000 ஆயிரம் வழங்கப்படும் என தி.மு.க. தலைவர் அறிவித் துள்ளார். உங்களுக்கே நன்றாக தெரியும் கருணாநிதி சொல்வதைதான் செய்வார்,  செய்வதைத்தான்  சொல்வார், அப்படி செய்து வாழ்ந்து மறைந்த கருணாநிதி வழியில் வந்த நம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் சொல்வ¬ த செய்து காட்டும் தலைவர். எனவே உங்கள் பொன்னான வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை பெருவாரியான  வாக்குகள்  வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தலைமை செயற்குழு உறுப் பினர் கே.என்.சேகரன்,  காட்டூர்பகுதி கழக செயலாளர் ஓ.நீலமேகம்  உட்பட மத சார்பற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Next Story