தொகுதி முழுவதும் சூறாவளி பிரசாரம்: குஜிலியம்பாறை பகுதியில் தி.மு.க. வேட்பாளர் எஸ்.காந்திராஜன் தீவிர வாக்கு சேகரிப்பு


தொகுதி முழுவதும் சூறாவளி பிரசாரம்: குஜிலியம்பாறை பகுதியில் தி.மு.க. வேட்பாளர் எஸ்.காந்திராஜன் தீவிர வாக்கு சேகரிப்பு
x
தினத்தந்தி 31 March 2021 11:04 AM IST (Updated: 31 March 2021 11:04 AM IST)
t-max-icont-min-icon

குஜிலியம்பாறை பகுதியில் தி.மு.க. வேட்பாளர் எஸ்.காந்திராஜன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

குஜிலியம்பாறை, 

வேடசந்தூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் எஸ்.காந்திராஜன் போட்டியிடுகிறார். தேர்தலுக்கு குறைந்த நாட்க ளே உள்ளதால் தொகுதிக்கு உட்பட்ட பேரூராட்சிகள், கிராமங்கள் என அனைத்து பகுதிகளுக்கும் சென்று சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். அங்கு திறந்தவேனில் நின்றபடியும், வீடு, வீடாக சென்றும் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறார். 
அதன்படி நேற்று குஜிலியம்பாறை ஒன்றியத்திற்கு உட்பட்ட கோட்டாநத்தம் ஊராட்சி பகுதியில் உள்ள கிராமங்களில் வாக்கு சேகரித்தார். முன்னதாக அங்கு சென்ற அவருக்கு பொதுமக்கள், கட்சியினர் மலர்தூவியும், மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

தி.மு.க.வில் இணைந்த இளைஞர்கள் தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் எஸ்.காந்திராஜன், ஒன்றிய செயலாளர் சீனிவாசன் முன்னிலையில் தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு எஸ்.காந்திராஜன் சால்வை அணிவித்து வரவேற்றார்.

பின்னர் அவர் பேசுகையில், தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது. பெட்ரோல்-டீசல், சமையல் கியாஸ் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால் மக்கள் தவிப்புக்கு உள்ளாகி உள்ளனர். எனவே அவர்கள் மாற்றத்தை நோக்கி காத்திருக்கின்றனர். தமிழகத்தில் மக்களுக்கான ஆட்சி அமைய வேண்டும் என்றால் தி.மு.க. வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக வேண்டும். இதற்கு மக்கள் என்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார். 

பிரசாரத்தில் பாளையம் பேரூர் செயலாளர் சம்பத், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சக்திவேல், கோட்டாநத்தம் ஊராட்சி செயலாளர் கர்ணன், முன்னாள் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கலைச்செல்வன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராயல் ராஜேந்திரன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கவியரசன், கட்சி நிர்வாகிகள் மாரிமுத்து, பொன்சுப்ரமணியன், சவுந்தர்மாரியப்பன், மணிமாறன், தாமரைக்கண்ணன் செல்வராஜ், ராஜ்குமார், செல்வநாராயணன், திருமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story