அரசமலை பேச்சியம்மன் கோவிலில் முளைப்பாரி திருவிழா


அரசமலை பேச்சியம்மன் கோவிலில் முளைப்பாரி திருவிழா
x
தினத்தந்தி 1 April 2021 12:16 AM IST (Updated: 1 April 2021 12:16 AM IST)
t-max-icont-min-icon

அரசமலை பேச்சியம்மன் கோவிலில் முளைப்பாரி திருவிழா நடைபெற்றது.

காரையூர், ஏப்.1-
காரையூர் அருகே அரசமலையில் பேச்சியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் முளைப்பாரி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி பூக்கள் எடுத்து வந்து அம்மனுக்கு செலுத்தினர். முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம் உள்பட பல்வேறு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மன் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் பால்குடம் எடுத்தும், பூக்குழியில் இறங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து பெண்கள் முளைப்பாரி எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர். விழாவில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

Next Story