அரிசி வியாபாரியிடம் ரூ.70 ஆயிரம் பறிமுதல்

அரிசி வியாபாரியிடம் ரூ.70 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
வாடிப்பட்டி,ஏப்
சோழவந்தான் ரயில்வே கேட் அருகில் பறக்கும் படை அதிகாரி வாசுகி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன், ஏட்டுகள் மணிராஜா, ரேணுகாதேவி ஆகியோர் அடங்கிய குழுவினர் வாகன சோதனை செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த அரிசி வியாபாரி ஒருவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி இருந்த ரூ.70 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணம் வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி ஜெஸ்டின் ஜெயபால், உதவி தேர்தல் அதிகாரி பழனிக்குமார் ஆகியோர் பார்வையிட்ட பின் சார்நிலை கருவூலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story