வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் தயார்


வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் தயார்
x
தினத்தந்தி 31 March 2021 10:41 PM GMT (Updated: 31 March 2021 10:41 PM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் தயார் செய்யப்பட்டு, பிரித்து அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் தயார் செய்யப்பட்டு, பிரித்து அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
சட்டமன்ற தேர்தல்
திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, தெற்கு, அவினாசி, பல்லடம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம், காங்கேயம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 8 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குக்சாவடிகளுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. அந்தந்த பகுதிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்களும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே வாக்குப்பதிவு வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது.  இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் மும்முரமாக செய்து வருகிறார்கள். அந்த வகையில் வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் தொகுதி வாரியாக பிரித்து அனுப்பப்பட்டுவிட்டது.
வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் தயார் 
வாக்குச்சாவடியில் பணியாற்றும் அலுவலர்கள் பயன்படுத்த பென்சில், பேனா, நூல்கண்டு, மை பாட்டில், பிளேடு, மெழுகுவர்த்தி, அரக்கு, சீல், குண்டூசி, ரப்பர், தீப்பெட்டி உள்ளிட்ட 18 வகையான பொருட்கள் ஒரு பொட்டலத்தில் தயார் செய்யப்பட்டு, ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கு ஒன்றும் என பிரித்துவைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகத்தில் இருந்து தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு அனுப்ப இவை அனைத்தும் நேற்று தயார் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த பொட்டலங்கள் அனைத்தும் வாக்குச்சாவடிகளுக்கும் பிரித்து அனுப்பப்படுகின்றன.

Next Story