அ.ம.மு.க வினர் பலர் அ.தி.மு.க வேட்பாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் முன்னிலையில் இணைந்தனர்


அ.ம.மு.க வினர் பலர் அ.தி.மு.க வேட்பாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் முன்னிலையில் இணைந்தனர்
x
தினத்தந்தி 1 April 2021 7:36 AM IST (Updated: 1 April 2021 7:36 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூர் சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் ஆர்.கே.ரவிச் சந்திரன் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரித்தார்.

விருதுநகர் ,

அ.ம.மு.க விருதுநகர் மத்திய மாவட்ட இளைஞர் பசாறை துணை செயலாளர் மணிகண்டன், அ.ம.மு.க கண்மாய்பட்டி கிளை செயலாளர் சக்திவேல், வளையாபட்டி கிளை செயலாளர் குணசேகரன் ஆகியோர் கட்சியில் இருந்து விலகி விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர், சாத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஆர்.கே. ரவிச்சந்திரன் முன்னிலையில் அ.தி.மு.க வில் இணைந்தனர்.  அப்போது ஆர்.கே. ரவிச்சந்திரன் பேசுகையில்  தாய் கழத்தில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தாய் கழத்திற்கு வருபவர்களை வரவேற்கி றேன் என்றார்.

பின்னர் பிரச்சாரத்தை சாத்தூர் பகுதியில் தொடங்கினார். சாத்தூரில் நவீன உள்கட்ட அமைப்புடன் புதிய பேருந்து நிலையம் அமைக்கபாடுபடுவேன், உயர்த்தபட்ட கோவில் நிலங்களின் வாடகையை குறைக்க நடவடிக்கை எடுப்பேன், பொதுமக்கள், வியா பாரிகளுக்கு இடையூறு இல்லாமல் இரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன், சாத்தூர் அதன் சுற்று வட்டார பகுதியில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைத்து கொடுப்பேன். தங்குதடையின்றி குடிநீர், சாலை வசதி செய்துதர நடவடிக்கை எடுப்பேன். 

பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன். முதல்வர் எடப்பாடியாரின் நல்ல ஆட்சி தொடர, மக்களுக்கு நல்ல திட்டங்களை மீண்டும் வழங்கிட, குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1500 வழங்கிடவும், அனைத்து குடும்ப அட்டை தாரருக்கும் விலையில்லா வாஷிங்மிஷன், சோலார் சமையல் அடுப்பு வழங்கிட, சொந்த வீடு இல்லாத வர்களுக்கு இடம் வாங்கி வீடு கட்டிதர, மகளிர்சுய உதவிக்குழுக் கடன், விவசாய நகைக்கடனை தொடந்து, மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்ய, வீட்டில் ஒருவ ருக்கு அரசுபணி வழங்கிட, வருடத்திற்கு 6 சிலிண்டர் இலவசமாக வழங்கிட, இலவச அரசு கேபிள் இணைப்பு வழங்கிட இரட்டை இலை சின்னத் திற்கு வாக்களித்து ஆர்.கே.ரவிச்சந்திரன் ஆன என்னை வெற்றிபெற செய்யுமாறு கேட்டு கொண்டார். செல்லும் இடங்கள் எல்லாம் பொது மக்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர். 

இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க கழக நிர்வாகிகள், தொண்டர்கள். 
பாரதியா ஜனதா கட்சி, தமிழ் மாநில காங்கி ரஸ்,பட்டாளி மக்கள் கட்சி, உள்ளிட்ட  கூட்டணி கட்சி நகர, ஒன்றிய கழக  நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Next Story