முசிறி தொகுதி தி.மு.க. வேட்பாளர் காடுவெட்டி ந.தியாகராஜன் கிராமம், கிராமமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு


முசிறி தொகுதி தி.மு.க. வேட்பாளர் காடுவெட்டி ந.தியாகராஜன் கிராமம், கிராமமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு
x
தினத்தந்தி 1 April 2021 11:25 AM IST (Updated: 1 April 2021 11:25 AM IST)
t-max-icont-min-icon

முசிறி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ஆதரவாளர்களுடன் கிராமம், கிராமமாக தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள தி.மு.க. வேட்பாளர் காடுவெட்டி ந.தியாகராஜன் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டுபேசினார்.

முசிறி,

முசிறி சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி ந.தியாகராஜன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு முசிறி, தொட்டியம், தா.பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்குகள் சேகரித்து ஆதரவு திரட்டினார். மேலும் முசிறி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ஆதரவாளர்களுடன் கிராமம், கிராமமாக தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள தி.மு.க. வேட்பாளர் காடுவெட்டி ந.தியாகராஜன் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டுபேசினார். 

அப்போது அவர் தொட்டியம் பகுதியில் அரசு கல்லூரி அமைக்கவேண்டும் என்பது கல்வியாளர்கள், இளைஞர்கள், இளம்பெண்களின் விருப்பமாகும். இதனை நிறைவேற்றும் வகையில்  அரசு கல்லூரி கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன். முசிறி தொட்டியம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் சாலை வசதிகள் மேம்படுத்தப்படும். விவசாயிகளின் வாழ்வாதாரம் முன்னேற்றத்திற்கு என்றும் துணையாக இருப்பேன் எனவே உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை சட்டமன்ற உறுப்பினராக நீங்கள் தேர்வு செய்யவேண்டும். 

தமிழக முதல்-அமைச்சராக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றால் தான் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், விவசாயம், தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகள் வளர்ச்சி அடையும். இவ்வாறு அவர் பேசினார். அப்போது வேட்பாளர் காடுவெட்டி ந.தியாகராஜனுக்கு கட்சியினர் சால்வை அணிவித்தும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளித்தனர். பிரசாரத்தின் போது ஒன்றிய பொருப்பாளர்கள் திருஞானம், தங்கவேல், நகர செயலாளர்கள் கங்காமனோகரன், நிர்மலா சந்திரசேகரன் கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story