நாமக்கல் மாவட்டத்தில் பெண் டாக்டர் உள்பட 20 பேருக்கு கொரோனா


நாமக்கல் மாவட்டத்தில் பெண் டாக்டர் உள்பட 20 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 1 April 2021 10:25 AM GMT (Updated: 1 April 2021 10:25 AM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் பெண் டாக்டர் உள்பட 20 பேருக்கு கொரோனா

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் பெண் டாக்டர் உள்பட 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
20 பேருக்கு கொரோனா
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 12,-093 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே பிற மாவட்டத்தை சேர்ந்த 2 பேரின் பெயர் அந்தந்த மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,091 ஆக குறைந்தது.
இந்த நிலையில் நேற்று ஆரம்ப சுகாதார நிலைய பெண் டாக்டர், ஆயுதப்படை போலீஸ்காரர், அரசு பஸ் கண்டக்டர் உள்பட 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,111 ஆக உயர்ந்து உள்ளது.
147 பேருக்கு சிகிச்சை
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11,853 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 111 பேர் இறந்து விட்ட நிலையில், 147 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருப்பதால் பொதுமக்கள் முககவசம் அணிந்து அரசின் பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
========

Next Story