நீட் தேர்வுக்கு முடிவு கட்ட தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும்


நீட் தேர்வுக்கு முடிவு கட்ட தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும்
x
தினத்தந்தி 1 April 2021 8:26 PM IST (Updated: 1 April 2021 8:26 PM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வுக்கு முடிவு கட்ட தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும் என்று கனிமொழி எம்.பி. பேசினார்.

நத்தம்: 

திண்டுக்கல் மாவட்டம் நத்தம், நிலக்கோட்டை  சட்டமன்ற தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து  கனிமொழி எம்.பி. பிரசாரம் செய்தார். 

அப்போது அவர் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெற்றி கனவில் உள்ளனர். 

அந்த கனவு பலிக்காது. தமிழகத்தின் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்கும் காலம் மிக அருகில் நெருங்கி வந்துள்ளது. 

நீட் தேர்வுக்கு முடிவு கட்ட தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும். 

தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். 

இதேபோல் கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் மின்சாரத்துறையில் பலகோடி ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும்.

இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார்.

Next Story