இணையவழி கருத்தரங்கம்


இணையவழி கருத்தரங்கம்
x
தினத்தந்தி 1 April 2021 6:23 PM GMT (Updated: 1 April 2021 6:23 PM GMT)

இளையான்குடியில் டாக்டர் சாகீர் உசேன் கல்லூரியில் இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது.

இளையான்குடி,

இளையான்குடியில் டாக்டர் சாகீர் உசேன் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் மாணவிகளுக்கான இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பீர்முகமது வரவேற்றார். கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் அப்ரோஸ் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.சிறப்பு விருந்தினராக திருச்சி ஜமால் முகமது கல்லூரி ஊட்டச்சத்து துறை மற்றும் உணவு முறை துறை உதவிப் பேராசிரியை ஏஞ்சல் கலந்துகொண்டு பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகையும் அதை மாற்றுவதற்கான ஆரோக்கிய உணவு முறை பற்றியும் சிறப்புரையாற்றினார். இதில் இளங்கலை இறுதி ஆண்டு விலங்கியல் துறை மாணவி நமீரா நன்றி கூறினார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் செய்யது யூசுப் விழாவினை ஒருங்கிணைத்தார்.

Next Story