அதிமுக திமுகவை சேர்ந்த 7 பேர் மீது வழக்கு


அதிமுக திமுகவை சேர்ந்த 7 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 2 April 2021 12:19 AM IST (Updated: 2 April 2021 12:24 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் பிரசாரத்தில் மோதலில் அ.தி.மு.க. தி.மு.க.வை சேர்ந்த 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி வெங்கடேசா காலனி பகுதியில் தி.மு.க.வினர் வேட்பாளர் டாக்டர் வரதராஜனை ஆதரித்து பிரசாரம் செய்தனர். 

அப்போது பொள்ளாச்சி பாலியல் வழக்கு குறித்தும், அ.தி.மு.க. வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் குறித்தும் பேசியதாக தெரிகிறது. 

இதை அ.தி.மு.க.வினர் தட்டி கேட்ட போது, இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டது. 

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று  இருதரப்பினரையும் சமானப்படுத்தி அனுப்பி வைத்தனர். 

இது குறித்து பொள்ளாச்சி நகர கிழக்கு போலீஸ் நிலையத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கொடுத்த புகாரின்பேரில் தி.மு.க. பிரமுகர்கள் முருகேசன், போர்வேல் துரை, தென்றல் மணிமாறன் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  

இதேபோன்று தி.மு.க. தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் அ.தி.மு.க. கோவை தெற்கு மாணவர் அணி மாவட்ட செயலாளர் ஜேம்ஸ்ராஜா, முன்னாள் கவுன்சிலர் நீலகண்டன், நகர பொருளாளர் கனகராஜ் மற்றும் வீராசாமி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த சம்பவத்தில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வை சேர்ந்த 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Next Story