வாக்குப்பதிவு எந்திரங்களில்வேட்பாளரின் பெயர், சின்னம் பொருத்தும் பணி
வாக்குப்பதிவு எந்திரங்களில்வேட்பாளரின் பெயர், சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது.
விருதுநகர்,ஏப்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் புகைப்படத்துடன் கூடிய வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் கண்ணன் விருதுநகர் கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரி, காரியாபட்டி சி.இ.ஓ.ஏ. கல்லூரி ஆகிய இடங்களில் நேரில் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து கலெக்டர் கண்ணன் கூறுகையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 5,058 வாக்குப்பதிவு எந்திரங்கள், 2,965 கட்டுப்பாட்டு எந்திரங்கள் மற்றும் 3,085 வாக்காளர் சரிபார்க்கும் எந்திரங்கள் என மொத்தம் 11,108 வாக்குப்பதிவு எந்திரங்கள் 2,370 வாக்குச்சாவடி மையங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் வழங்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், புகைப்படம், சின்னம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி உரிய முறையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
ஆய்வின்போது தேர்தல் நடத்தும் அலுவலர்கள் விருதுநகர் சந்தானலட்சுமி, அருப்புக்கோட்டை முருகேசன், திருச்சுழி கணேசன் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story