கிருஷ்ணராயபுரத்தில் ஓட்டலில் இரவு உணவு சாப்பிட்ட உள்துறை மந்திரி அமித்ஷா


கிருஷ்ணராயபுரத்தில் ஓட்டலில் இரவு உணவு சாப்பிட்ட உள்துறை மந்திரி அமித்ஷா
x
தினத்தந்தி 1 April 2021 7:32 PM GMT (Updated: 1 April 2021 7:32 PM GMT)

கிருஷ்ணராயபுரத்தில் ஓட்டலில் இரவு உணவு உள்துறை மந்திரி அமித்ஷா சாப்பிட்டார்

கிருஷ்ணராயபுரம்
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் பிரசாரத்தை முடித்து கொண்டு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று மாலை அங்கிருந்து சாலை மார்க்கமாக கார் மூலம் கரூர் வழியாக திருச்சிக்கு புறப்பட்டார். அப்போது வரும் வழியில் நேற்று இரவு கிருஷ்ணராயபுரத்தில் சாலையோரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் கட்சி நிர்வாகிகளுடன் அமர்ந்து உள்துறை மந்திரி அமித்ஷா இரவு உணவாக இட்லி, தோசை, வடை, மிளகுரசம் ஆகியவற்றை ருசித்து சாப்பிட்டார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் திருச்சி விமான நிலையம் வந்து தனி விமானத்தில் கொல்கத்தா புறப்பட்டு சென்றார். 

Next Story