குழியில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு


குழியில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு
x
தினத்தந்தி 1 April 2021 7:36 PM GMT (Updated: 1 April 2021 7:36 PM GMT)

கழிவுநீர் குழியில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது.

குளித்தலை
குளித்தலை பெரியார் நகர் பகுதியில் அப்பகுதியை சேர்ந்த ஒருவரது பசுமாடு ஒன்று நேற்று தெருவோரம் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென அப்பகுதியில் உள்ள வீட்டின் முன்பு இருந்த கழிவுநீர் தேங்கியிருந்த குழியில் அந்த பசு மாடு தவறி விழுந்து விட்டது. அதனால் அந்த குழியில் இருந்து வெளிவரமுடியாமல் சிக்கிக்கொண்டது. இதைப் பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் மாட்டை மீட்க வழிதெரியாமல் செய்வதறியாது இருந்தனர். இதையடுத்து அங்கு வந்த சிலர் உடனடியாக பொக்லைன் எந்திரத்தை வரவழைத்தனர். பின்னர் மாடு விழுந்துகிடந்த கழிவுநீர் குழியின் அருகே சிறிய பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர் பொதுமக்கள் முயற்சி செய்து கழிவுநீர் குழியில் விழுந்த கிடந்த பசுமாட்டை மீட்டனர். கழிவுநீர் குழியில் மாடு விழுந்து சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story