அங்கன்வாடி பணியாளர்கள் சங்க கூட்டம்


அங்கன்வாடி பணியாளர்கள் சங்க கூட்டம்
x
தினத்தந்தி 1 April 2021 7:38 PM GMT (Updated: 1 April 2021 7:38 PM GMT)

அங்கன்வாடி பணியாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.

பொன்னமராவதி, ஏப்.2-
பொன்னமராவதியில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்க வட்டார பொதுக்குழு கூட்டம் சகுந்தலா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பச்சையம்மாள், மாவட்ட துணை தலைவர்கள் சந்திரா, தனலெட்சுமி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.  கூட்டத்தில் வட்டார புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநில பொருளாளர் தேவமணி நிறைவுரையாற்றினார். கூட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் தேர்தல்பணியில் இருப்பதால் தேர்தல் முடியும் வரை கூடுதல் பணிகளை பார்க்க சொல்லி கட்டாயப்படுத்த கூடாது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் பொருளாளர் பாண்டிச்செல்வி நன்றி கூறினார்.

Next Story