நாங்குநேரியில் லாரி மோதி சுங்கச்சாவடி ஊழியர் பலி
நாங்குநேரியில் லாரி மோதி சுங்கச்சாவடி ஊழியர் பலியானார்.
நாங்குநேரி:
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அடுத்துள்ள கோவி்ல்பத்து கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 50). இவர் நாங்குநேரி சுங்கச்சாவடியில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் நாகர்கோவில் செல்லும் கவுண்டரில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது நெல்லை நோக்கி வந்த லாரி, தாறுமாறாக ஓடி மாரியப்பன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதில் பலத்த காயம் அடைந்த மாரியப்பன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மற்றொரு வாகனத்தில் விரட்டிச்சென்று லாரியை மடக்கினர்.
இதுதொடர்பாக லாரி டிரைவர் தூத்துக்குடி சண்முகபுரத்தை சேர்ந்த கணேஷ் (50) என்பவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story