விவசாயிக்கு அரிவாள் வெட்டு 4 பேர் கைது


விவசாயிக்கு அரிவாள் வெட்டு 4 பேர் கைது
x
தினத்தந்தி 2 April 2021 2:05 AM IST (Updated: 2 April 2021 2:05 AM IST)
t-max-icont-min-icon

பாபநாசம் அருகே திருமண பத்திரிகையில் பெயர் போடாததால் விவசாயிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாபநாசம்:
பாபநாசம் அருகே திருமண பத்திரிகையில் பெயர் போடாததால் விவசாயிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். 
அரிவாள் வெட்டு 
பாபநாசம் அருகே நல்லிச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 52). இவரது மகளுக்கு அய்யம்பேட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. அப்போது அவரது உறவினர்களான அழகர்சாமி, சிங்காரவேலன், விஜயகுமார், மகேந்திரன் ஆகிய 4 பேரும் சேர்ந்து திருமண மண்டபத்திற்கு வந்து திருமண  பத்திரிகையில் பெயர் போடாததால் ஆத்திரம் அடைந்து அண்ணாதுரையை அரிவாளால் வெட்டினர். மேலும் அங்கு  நின்றுகொண்டிருந்த போலீஸ் வாகனத்தின் பின்பக்க கண்ணாடியை  நான்கு பேரும் உடைத்தனர்.  இந்தநிலையில் படுகாயமடைந்த அண்ணாதுரை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
4 பேர் கைது 
இதுகுறித்து அண்ணாதுரை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகர்சாமி (41), சிங்காரவேலன் (35), விஜயகுமார் (40), மகேந்திரன் ( 33) ஆகிய 4 பேரையும் கைது செய்து தஞ்சை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Next Story