சித்தோட்டில் வாக்கு எண்ணும் மையங்களை கலெக்டர் கதிரவன் ஆய்வு


சித்தோட்டில் வாக்கு எண்ணும் மையங்களை கலெக்டர் கதிரவன் ஆய்வு
x
தினத்தந்தி 2 April 2021 2:11 AM IST (Updated: 2 April 2021 2:11 AM IST)
t-max-icont-min-icon

சித்தோட்டில், வாக்கு எண்ணும் மையங்களை கலெக்டர் கதிரவன் ஆய்வு செய்தார்.

சித்தோட்டில், வாக்கு எண்ணும் மையங்களை கலெக்டர் கதிரவன் ஆய்வு செய்தார்.
சட்டமன்ற தேர்தல்
இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வருகிற 6-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் தொடர்பான பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் தேர்தல் தொடர்பான புகார்கள், கருத்துக்களை கண்காணிக்க தேர்தல் பொதுப்பார்வையாளர்கள், வேட்பாளர்களின் செலவினங்களை கண்காணிக்க தேர்தல் செலவின பார்வையாளர்கள் மற்றும் வாக்குப்பதிவு மையங்கள், வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பினை கண்காணிக்க தேர்தல் காவல் பார்வையாளர் ஆகியோர் அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் நியமிக்கப்பட்டு தேர்தல் பணிகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
வாக்கு எண்ணும் மையம்
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் தேர்தல் தொடர்பான புகார் மனுக்களை உடனுக்குடன் களையும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் சித்தோடு சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரி மற்றும் கோபி கலை அறிவியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று சித்தோடு சாலை போக்குவரத்து மற்றும் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சி.கதிரவன் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வு
அப்போது அவர், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் இருப்பறை, வாக்கு எண்ணும் மையங்களில் குடிநீர், மின்சாரம், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும், வாக்கு எண்ணும் அறை, வாக்கு பெட்டிகள் இருப்பறை, வாகனங்கள் நிறுத்தும் இடம், வாக்குச்சாவடி முகவர்கள் அறை, ஊடக மையம் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகம், தேர்தல் பார்வையாளர்கள் அறை, தேவையான இடங்களில் பாதுகாப்பு வசதி ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சைபுதீன் (ஈரோடு மேற்கு), வாணி லட்சுமி ஜெகதாம்பாள் (பவானி), இளங்கோவன் (ஈரோடு கிழக்கு) உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story