பெருந்துறை சிப்காட் வளாகத்தில் தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து


பெருந்துறை சிப்காட்  வளாகத்தில் தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
x
தினத்தந்தி 2 April 2021 2:35 AM IST (Updated: 2 April 2021 2:35 AM IST)
t-max-icont-min-icon

பெருந்துறை சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

பெருந்துறை சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
தொழிற்சாலையில் தீ விபத்து
பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் பெயிண்ட் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து  அனைவரும் சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் பேக்கிங் பகுதியில் திடீரென தீ பிடித்தது. இதனால் மளமளவென தீ பரவியது.  பெயிண்ட் தயாரிக்கும் எந்திரம் உள்ள பகுதி வரை தீப்பிடித்து எரிந்தது. இதைப்பார்த்த தொழிற்சாலை காவலாளி பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.
உயிர் சேதம் தவிர்ப்பு
அதைத்தொடர்ந்து நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.
மின்கசிவினால் இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 
இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்து நடந்த போது தொழிலாளர்கள் யாரும் அங்கு இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

Next Story