மயங்கி விழுந்த டீ மாஸ்டர் உள்பட 3 பேர் சாவு


மயங்கி விழுந்த டீ மாஸ்டர் உள்பட 3 பேர் சாவு
x
தினத்தந்தி 2 April 2021 2:37 AM IST (Updated: 2 April 2021 2:37 AM IST)
t-max-icont-min-icon

வெவ்வேறு இடங்களில் மயங்கி விழுந்து 3 பேர் உயிரிழந்தனர்.

திருச்சி
திருச்சி உறையூர் சக்தி நகரை சேர்ந்தவர் பீர்முகமது (வயது 34). இவர் உறையூர் டாக்கர் சாலையிலுள்ள ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் டீக்கடைக்கு சென்ற அவர் மதியம் திடீரென மயங்கி விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். திருச்சி இ.பி.ரோடு காசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் நாகலிங்கம் (84). இவர் கடந்த மாதம் 28-ந் தேதி நடை பயிற்சிக்காக வெளியே சென்ற அவர், திடீரென மயங்கி விழுந்தார். திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அன்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருச்சி அரியமங்கலம் உக்கடை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன் (62). வீட்டில் தவறி விழுந்ததில் காயமடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார்.


Next Story