நெசவாளர்களுக்கு உறுதுணையாக இருப்பேன் ஜெயங்கொண்டம் பா.ம.க. வேட்பாளர் பாலு உறுதி


நெசவாளர்களுக்கு உறுதுணையாக இருப்பேன் ஜெயங்கொண்டம் பா.ம.க. வேட்பாளர் பாலு உறுதி
x
தினத்தந்தி 2 April 2021 9:39 AM IST (Updated: 2 April 2021 9:39 AM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பா.ம.க. வேட்பாளர் வழக்கறிஞர் பாலு போட்டியிடுகிறார்.

ஜெயங்கொண்டம், 

ஜெயங்கொண்டம் தொகுதிக்கு உட்பட்ட காங்குழி, தெற்குநத்தம், அய்யூர், இடையக்குறிச்சி, கொடுக்கூர், குடிகாடு, வாரியங்காவல், இலையூர் உள்ளிட்ட கிராமங்களில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் சென்று பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் சென்ற இடமெங்கும் கூட்டணிக் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பட்டாசு வெடித்து, ஆரத்தி எடுத்து, சால்வை அணிவித்து உற்சாகமாக வரவேற்பளித்தனர்.
அவர், தனக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பொதுமக்களிடம் வேட்பாளர் பாலு பேசுகையில், வாரியங்காவல், இலையூர் ஆகிய ஊர்களில் பட்டு நெசவு மற்றும் நெசவுத்தொழில் நடைபெற்று வருகிறது. இதனை மேலும் புதிய தொழில்நுட்பத்துடன், இங்கு உற்பத்தி செய்யப்படும் சேலைகள் மற்றும் கைத்தறி பொருட்களை தமிழ்நாடு மட்டுமல்லாமல் பிற மாநிலங்கள் மற்றும் பிற நாடுகளுக்கும் அறிய செய்வேன். அத்தோடு மட்டுமல்லாமல் பட்டு மற்றும் நெசவு பூங்கா அமைக்க பாடு படுவேன். ஆடை இல்லாத மனிதன் அரை மனிதன். இந்த ஆடைகளை உருவாக்கும் நெசவாளர்களுக்கு என்றும் நான் உறுதுணையாக இருப்பேன். மேலும் உங்கள் ஊர்களில் உள்ள அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றுவதுடன், நெசவாளர்களின் வாழ்க்கை தரம் உயரவும், அவர்களுக்கு உதவும் வகையிலும் அனைத்து அடிப்படை வசதிகளும் பெற்றுத்தர பாடுபடுவேன், என்றார். வாக்கு சேகரிப்பின்போது ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம், முன்னாள் எம்.பி. இளவரசன், மாநில வன்னியர் சங்க செயலாளர் க.வைத்தி, 
பா.ம.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் டி.எம்.டி. திருமாவளவன், முன்னாள் எம்.எல்.ஏ. மாசிலாமணி, பொறியாளர் கோமகன், மாநில இளைஞரணி துணை செயலாளர் அறிவு என்ற சிவசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் தங்கபிச்சமுத்து, கல்யாணசுந்தரம், மருதமுத்து, அ.தி.மு.க. நகர செயலாளர் பி.ஆர்.செல்வராஜ், அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் ரீடு செல்வம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் ராஜாரவி, ஜெயலலிதா பேரவை ஜெகன்ராஜ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து நேற்று இரவு அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் தலைமையில் ஜெயங்கொண்டம் தொகுதி பா.ம.க. தேர்தல் 
அலுவலகத்தில் ஊழியர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கூட்டணி கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story