தொப்பூரில் லாரிகள், கார் மோதல்; 5 பேர் படுகாயம்


தொப்பூரில் லாரிகள், கார் மோதல்; 5 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 2 April 2021 10:31 AM IST (Updated: 2 April 2021 10:31 AM IST)
t-max-icont-min-icon

தொப்பூரில் லாரிகள், கார் மோதிய விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

நல்லம்பள்ளி:
ஆந்திராவில் இருந்து கோவைக்கு சிமெண்டு பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி, தர்மபுரி மாவட்டம் தொப்பூர் வழியாக நேற்று வந்தது. இந்த லாரியை கோவையை சேர்ந்த மணிவண்ணன் (வயது 27) என்பவர் ஓட்டி வந்தார். தொப்பூர் புதூர் பகுதி பகுதியில் வந்தபோது முன்னால் சென்ற கார், கெமிக்கல் பவுடர் ஏற்றிச் சென்ற லாரி மற்றும் சாலையில் நடந்து சென்ற பெண் ஒருவர் மீது சிெமண்டு பாரம் ஏற்றி வந்த லாரி அடுத்தடுத்து மோதியது. இந்த விபத்தில் காரில் வந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த சீனிவாசன் (29), அவரது மனைவி காயத்ரிதேவி (23), சாலையில் நடந்து சென்ற தொப்பூரை சேர்ந்த சத்யவாணி (35), சிமெண்டு லாரி டிரைவர் மணிவண்ணன் (27) உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story