10 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது


10 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது
x
தினத்தந்தி 2 April 2021 12:07 PM IST (Updated: 2 April 2021 12:07 PM IST)
t-max-icont-min-icon

10 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,ஏப்
ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜபாளையம் மெயின் ரோட்டில் வன்னியம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் திவ்யா தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது தனியார் ஓட்டல் அருகில் உள்ள கல் மண்டபத்தில் மொத்தமாக கஞ்சாவை வைத்து பொட்டலம் போட்டுக் கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் 10 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரை வன்னியம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர் மாரீஸ்வரன் (வயது 33) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கஞ்சா விற்பனையில் தொடர்புடைய திருப்பதி (28), விஜயகுமார் (22) ஆகியோரையும் கைது செய்தனர். மேலும் வைத்தியலிங்கபுரத்தைச் மகாலிங்கம் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் தேடி வருகின்றனர். 10 கிலோ கஞ்சா, ரூ.2800 மற்றும் மோட்டார்சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story