கொடைக்கானல் வனப்பகுதியில் தீப்பிடித்தது


கொடைக்கானல் வனப்பகுதியில் தீப்பிடித்தது
x
தினத்தந்தி 2 April 2021 8:54 PM IST (Updated: 2 April 2021 8:54 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் வனப்பகுதியில் பேத்துப்பாறை என்னுமிடத்தில் தீப்பிடித்தது.

கொடைக்கானல்: 

கொடைக்கானலில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் காரணமாக வனப்பகுதியில் அடிக்கடி தீப்பிடித்து வருகிறது. 

இந்த நிலையில் நேற்று காலையில் ெகாடைக்கானல் தாலுகா பேத்துப்பாறை கிராமம் அருகேயுள்ள வனப்பகுதியில் தீப்பிடித்தது. 

இதில் அங்குள்ள மரங்கள், செடிகள் மற்றும் வனவிலங்குகள் தீயில் கருகி நாசமாகின. 

இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

மேலும் அந்த பகுதியில் கடும் புகை மண்டலமாக காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர். 


Next Story