துணை ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு
பழனியில் துணை ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
பழனி:
தமிழகத்தில் வருகிற 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவ படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தேர்தலையொட்டி வாகன சோதனை, பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பழனியில் நேற்று வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் துணை ராணுவ படையினர் மற்றும் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
இதனை பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு சிவா தொடங்கி வைத்தார்.
இந்த அணிவகுப்பு பழனி தேரடி பகுதியில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து பஸ்நிலையத்தில் முடிவடைந்தது.
Related Tags :
Next Story