மோகூர் கிராமமக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக பேனர் வைத்ததால் பரபரப்பு
மோகூர் கிராமமக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக பேனர் வைத்ததால் பரபரப்பு
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மோகூர் கிராமத்தின் எல்லையில் அமைந்துள்ள மோகூர் ஏரியை பொதுப்பணித்துறையினர் சோமண்டார்குடி ஏரி என பெயர் மாற்றம் செய்துள்ளனர். எனவே இந்த ஏரியின் பெயரை மாற்றம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தலை புறக்கணிக்கப்போவதாக கிராமமக்கள் அறிவித்தனர். மேலும் இ்து தொடர்பாக கிராமத்தில் டிஜிட்டல் பேனர் ஒன்றையும் வைத்தனர்.
இது தவிர கோரிக்கையை வலியுறுத்தி சாலை மறியலுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என தண்டோரா மூலம் ஆதரவு திரட்டினர்.
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த சங்கராபுரம் தாசில்தார் சையத் காதர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கணேசன், வினோதினி மற்றும் வருவாய் துறையினர் கிராம மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி பழையபடி மோகூர் ஏரி என பெயர் மாற்றம் செய்வதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக வைத்துள்ள பேனரை அப்புறப்படுத்தினர்.
ஏரியின் பெயரை மாற்ற வலியுறுத்தி தேர்தலை புறக்கணிக்கப்போவதாக கிராமமக்கள் வைத்திருந்த பேனரால் மோகூர் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story