திருத்துறைப்பூண்டியில் தி.மு.க.வினர் சாலை மறியல்


திருத்துறைப்பூண்டியில் தி.மு.க.வினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 2 April 2021 6:03 PM GMT (Updated: 2 April 2021 6:03 PM GMT)

மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரிசோதனை நடத்தப்பட்டதை கண்டித்து திருத்துறைப்பூண்டியில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருத்துறைப்பூண்டி;
மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரிசோதனை நடத்தப்பட்டதை கண்டித்து திருத்துறைப்பூண்டியில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
மறியல்
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரிசோதனை நடைபெற்றது. இதை கண்டித்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தி.முக. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில்  சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. 
நாகை முன்னாள் எம். பி.ஏ.கே. எஸ். விஜயன், தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், தி.மு.க. நகர செயலாளர் ஆர். எஸ். பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், நகர செயலாளர் ரகுராமன், ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கரன், மற்றும்  தி.மு.க., ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், கட்சியை சேர்ந்த பொறுப்பாளர்கள் தொண்டர்கள் கலந்து கொண்டு வருமான வரி சோதனையை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். 
போக்குவரத்து பாதிப்பு
இது குறித்து  தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி, இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவகுகன், தேவதாஸ் ஆகியோர் சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து  சாலை மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர். திடீர் சாலை மறியலால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story