வாக்கு எண்ணும் மையத்தில் இரும்பு தடுப்புகள்


வாக்கு எண்ணும் மையத்தில் இரும்பு தடுப்புகள்
x
தினத்தந்தி 2 April 2021 7:09 PM GMT (Updated: 2 April 2021 7:09 PM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்கு எண்ணும் மையத்தில் இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுபோல் 180 கண்காணிப்பு கேமராக்களும் அங்கு பொருத்தப்பட்டு வருகிறது.

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்கு எண்ணும் மையத்தில் இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுபோல் 180 கண்காணிப்பு கேமராக்களும் அங்கு பொருத்தப்பட்டு வருகிறது.
வாக்குப்பதிவு எண்ணும் மையம்
திருப்பூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவினாசி, பல்லடம், காங்கேயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் வாக்குப்பதிவிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் வருகிற 6-ந் தேதி பதிவாகிய அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களும் திருப்பூர் பல்லடம் ரோட்டில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள வாக்குப்பதிவு எண்ணும் மையமான எல்.ஆர்.ஜி. அரசு கலைக்கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன. பின்னர் மே மாதம் 2-ந் தேதி அனைத்து தொகுதிகளின் வாக்குகளும் எண்ணப்படுகின்றன..
180 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
இந்த நிலையில் வாக்குப்பதிவு எண்ணும் மையத்தில் வர்ணம் பூசும் பணி உள்ளிட்ட ஏராளமான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அந்த வகையில் வாக்கு எண்ணும் மையத்தில் இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இரும்பு தடுப்புகள் வழியாக தேர்தல் அதிகாரிகள் உள்பட பலதரப்பினரும் தனித்தனியாக செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதுபோல் வாக்கு எண்ணும் மையத்தை கண்காணிக்கும் வகையில் ஒட்டுமொத்தமாக 180 கண்காணிப்பு கேமராக்களும் முக்கிய இடங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்டு வருகிறது. இதனால் வாக்கு எண்ணும் மையம் முழுவதும் தேர்தல் அதிகாரிகளின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

Next Story