3,510 போலீசாருக்கு தபால் வாக்குப்பதிவு செய்ய ஏற்பாடு


3,510 போலீசாருக்கு தபால் வாக்குப்பதிவு செய்ய ஏற்பாடு
x
தினத்தந்தி 2 April 2021 7:27 PM GMT (Updated: 2 April 2021 7:27 PM GMT)

தேர்தல் பணியில் ஈடுபடும் 3,510 போலீசாருக்கு தபால் வாக்குப்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர், 
தேர்தல் பணியில் ஈடுபடும் 3,510 போலீசாருக்கு தபால் வாக்குப்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
பாதுகாப்பு பணி 
சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6-ந்  தேதியன்று நடைபெற உள்ளது. அதனையொட்டி மாவட்டத்தில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், தேர்தல் அமைதியாகவும் நடைபெற பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
இம் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பணியில் ஆயுதப்படை போலீசார், ஊர்க்காவல் படையினர், சட்டம் ஒழுங்கு போலீஸ் துறையினர், சிறப்பு காவல்படையினர் ஆக மொத்தம் 3,510 போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணியல் ஈடுபட்டு உள்ளனர்.
தபால் வாக்கு 
அரசு தொழிற்பயிற்சி மையத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு தபால் வாக்கு செலுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 இங்கு தொகுதி வாரியாக போலீசாரிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் பெறப்பட்டு வாக்கு சீட்டுகள் வழங்கப்பட்டன. அதன் மூலம் போலீசார் தபால் வாக்கு செலுத்துவதற்காக வைக்கப்பட்ட மறைவுஅட்டை பகுதியில் வாக்கு செலுத்தி அதனை சீல் வைக்கப்பட்ட வாக்குப்பெட்டியில் இட்டனர். 
தேர்தல் அதிகாரி 
இதனை மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் கண்ணன் நேரடியாக பார்வையிட்டார்.
அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்ரமணியன், சிப்காட் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், வட்டாட்சியர் சிவஜோதி,  போலீசார் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story