விவசாயிகளுக்கு மாணவிகள் செயல் விளக்கம்
விவசாயிகளுக்கு மாணவிகள் செயல் விளக்கம்
சோழவந்தான்,ஏப்.
சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் கிராமத்தில் உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண்மை கல்லூரி மாணவிகள் முகாமிட்டுள்ளனர். இவர்கள் இப்பகுதியில் உள்ள விவசாயிகளை நேரடியாக சந்தித்து விவசாயம் குறித்து விளக்கம் அளித்து வருகின்றனர். இதில் தென்னையின் வேரூட்டம் குறித்து செயல் விளக்கம் அளித்தனர். தென்னை மரங்களில் நோய்களை கட்டுப்படுத்தவும், மகசூலை அதிகரிக்கவும் தென்னையில் வேரூட்டம் செய்வது அவசியமானது. ஒரு மரத்திற்கு வேரூட்டம் டானிக் 200 மில்லி வீதம் வருடத்திற்கு இரண்டு முறை செலுத்த வேண்டும் என்று மாணவிகள் தெரிவித்தனர். இதே போல் செல்லம்பட்டி ஒன்றியம், ஜோதிமாணிக்கத்தில் வண்ண ஒட்டு பொறிகளின் பயன்கள் குறித்து பயிற்சி முகாம் நடந்தது. இதில் வேளாண் கல்லூரி மாணவிகள் அமல் பிரிசில்லா, பிந்தியா, பிரியதர்ஷினி, ஹீர விலாஷினி ஆகியோர் பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணித்து ஏக்கருக்கு 5 மஞ்சள் மற்றும் நீலவண்ண அட்டை ஒட்டும் பொறிகளை வயல்களில் பயன்படுத்தும் முறையை விவசாயிகளுக்கு செய்து காண்பித்தனர்.
Related Tags :
Next Story