புதுக்கோட்டையில் ரூ.2 லட்சம் பறிமுதல்


புதுக்கோட்டையில் ரூ.2 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 3 April 2021 1:34 AM IST (Updated: 3 April 2021 1:34 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை, ஏப்.3-
புதுக்கோட்டை அண்டகுளம் விளக்கு பகுதியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி  சோதனையிட்டனர். அதில் ரூ.2 லட்சம் இருந்தது.
மேலும் காரை ஓட்டி வந்தவர் புதுக்கோட்டையை சேர்ந்தவர் என தெரிந்தது. அந்த பணத்தை வாகனம் வாங்குவதற்காக கொண்டு செல்வதாக அதிகாரிகளிடம் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு உரிய ஆவணம் அவரிடம் இல்லை. இதனால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அதனை புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி டெய்சிகுமாரிடம் ஒப்படைத்தனர். அந்த தொகையினை சரிபார்த்த பின் அதனை கருவூலத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டன.


Next Story